கூட்டுறவு வங்கி ஊழியர் வீட்டில் 3 பவுன் நகை, ரூ.23 ஆயிரம் திருட்டு

கூட்டுறவு வங்கி ஊழியர் வீட்டில் 3 பவுன் நகை, ரூ.23 ஆயிரம் திருட்டு போனது.

Update: 2022-04-07 18:17 GMT
வேப்பந்தட்டை
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள வெங்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி(வயது45). இவர் அதே ஊரில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டின் கதவை பூட்டிவிட்டு தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் காற்றுக்காக மொட்டை மாடியில் படுத்து தூங்கியுள்ளனர். காலையில் தூங்கி எழுந்து வந்து பார்த்த பெரியசாமி வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது அலமாரியில் வைக்கப்பட்டு இருந்த 3 பவுன் நகை மற்றும் ரூ.23 ஆயிரத்து 200 ஆகியவை திருடுபோய் இருந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக பெரியசாமி அரும்பாவூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு நடத்தினர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்