281 கோவில்களில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் நியமனம். ஆலோசனை கூட்டத்தில் தகவல்

திருப்பத்தூர் மாவட்டத்தில்281 கோவில்களில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் நியமிக்க ஆலோசிக்கப்பட்டது.

Update: 2022-04-07 18:06 GMT
திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட அறங்காவலர் குழு ஆலோசனை கூட்டம் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கே.எஸ்.அன்பழகன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள 281 கோவில்களில் புதிய அறங்காவலர் குழு உறுப்பினர்கள் நியமிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் திருப்பத்தூர் மாவட்டத்தில் வடவாளம் கிராமத்தில் உள்ள அகத்தீஸ்வரர் கோவிலுக்கு தமிழக அரசு ரூ.36 லட்சம் நிதி ஒதுக்கி குடமுழுக்கு விழா நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை சிறப்பாக செயல்படுத்தவும் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் சிறப்பான முறையில் பூஜைகள் நடைபெறுவதை உறுதி செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.
கூட்டத்தில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் தே.மோகன்ராஜ் சுகந்தி, கணேசன் கலந்து கொண்டனர். 

இதில் திருப்பத்தூர் மாவட்டம் தொடங்கப்பட்டு முதல்முறையாக மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்த தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள் எ.வ.வேலு,  ஆர்,காந்தி, சி.என்.அண்ணாதுரை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் நல்லதம்பி, தேவராஜி, வில்வநாதன், ஆகியோருக்கு  நன்றிகளை தெரிவித்துக் கொள்வது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் செய்திகள்