அரிமளம் தனியார் நிதி நிறுவனத்தில் நகை கையாடல் கிளை மேலாளருக்கு வலைவீச்சு
தனியார் நிதி நிறுவனத்தில் நகை கையாடல் செய்யப்பட்டது.
அரிமளம்:
அரிமளம் பேரூராட்சிக்கு உட்பட்ட எட்டாம் மண்டகப்படி பகுதியில் மணப்புரம் பைனான்ஸ் தங்க நகை அடகுக்கடை உள்ளது. இந்த அடகு கடையில் விராலிமலை அருகே உள்ள நீர்பழனி கிராமத்தை சேர்ந்த அசோக்குமார் (வயது 24) என்பவர் கிளை மேலாளராக பணியாற்றி வருகிறார். வாடிக்கையாளர்கள் கொண்டு வந்து அடகு வைத்த நகைகள் அனைத்தும் சரியாக உள்ளதா என அந்நிறுவனத்தின் ஆடிட்டர் வந்து சோதனை செய்தார். அப்போது சுமார் 48 கிராம் நகை குறைந்துள்ளது. இது தொடர்பாக அந்த கிளையின் மேலாளர் அசோக்குமாரிடம் விசாரித்தபோது அவர் பதில் ஏதும் தெரிவிக்காமல் இருந்துள்ளார். இதைத்தொடர்ந்து மணப்புரம் கோல்டு கோட்ட மேலாளர் பாரதி அரிமளம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து அசோக்குமாரை தேடி வருகின்றனர்.