அ.தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
அ.தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது.
அரியலூர்
அரியலூரில் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கோடை காலத்தை முன்னிட்டு தேரடியில் தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தாமரை ராஜேந்திரன் கலந்துகொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நீர்மோர், இளநீர், தர்பூசணி, வெள்ளரிப்பிஞ்சு ஆகியவற்றை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கட்சியின் அனைத்து அணி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல் கோடை காலத்தில் பொதுமக்கள் வெப்பத்தை தணித்துக்கொள்ள வி.கைகாட்டியில் உள்ள பஸ் நிறுத்ததில் அ.தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தலை தாமரை ராஜேந்திரன் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் அ.தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். இதில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.