எலக்ட்ரிக் கடை உரிமையாளர் பலி

போடிமெட்டு மலைப்பாதையில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து எலக்ட்ரிக் கடை உரிமையாளர் பலியானார்.

Update: 2022-04-07 17:51 GMT
போடி: 

கேரள மாநிலம் எர்ணாகுளம் கமலச்ெசரி போஸ்ட் பகுதியை சேர்ந்தவர் அருண் (வயது 27). இவர், எலக்ட்ரிக் பொருட்கள் விற்பனை கடை நடத்தி வந்தார். கடந்த 5-ந்தேதி இவர், தனது மனைவி அஞ்சுவுடன் (26) பெரியகுளத்தில் நடந்த கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக எர்ணாகுளத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது போடிமெட்டு மலைப்பாதையில் மணப்பட்டி என்னும் இடத்தில் வந்தபோது நிலைதடுமாறி மோட்டார் சைக்கிள் இருந்து 2 பேரும் கீழே விழுந்தனர். இதில் படுகாயம் அடைந்த அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக போடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இருந்து மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அருண் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து குரங்கணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்