எருமப்பட்டி அருகே பள்ளி மாணவியை திருமணம் செய்த வாலிபர் கைது
எருமப்பட்டி அருகே பள்ளி மாணவியை திருமணம் செய்த வாலிபர் கைது
எருமப்பட்டி :
எருமப்பட்டி அருகே உள்ள அலங்காநத்தம் ஊராட்சி பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி அரசு பள்ளிக்கூடத்தில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 31-ந் தேதி பள்ளிக்கூடத்துக்கு சென்ற மாணவி பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் தாய் இதுகுறித்து எருமப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி மாணவியை தேடி வந்தனர்.
இந்த நிலையில் போலீசார் விசாரணையில், சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே புங்கவாடி கிராமம் எம்.ஜி.ஆர். காலனியை சேர்ந்த பச்சமுத்து மகன் தினேஷ் (வயது 22) என்பவர் பொட்டிரெட்டிபட்டி ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்க வந்தபோது மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டு கடந்த சில தினங்களுக்கு முன் மாணவியை திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து ஆத்தூர் சென்ற போலீசார் மாணவியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும் மாணவியை திருமணம் செய்த தினேசை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.