திருப்பத்தூர் அருகே தீயில் கருகி மூதாட்டி சாவு

திருப்பத்தூர் அருகே தீயில் கருகி மூதாட்டி உயிரிழந்தார்

Update: 2022-04-07 17:43 GMT
திருப்பத்தூர், 
திருப்பத்தூர் அருகே உள்ள தெக்கூர் மேலத்தெருவை சேர்ந்தவர் காசி (வயது 90).  இவருடைய மனைவி வள்ளி (80). இந்நிலையில் மின்கசிவு காரணாக இவர்களுடைய வீட்டில் எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீவிபத்தில் படுகாயம் அடைந்த மூதாட்டி உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காசி படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதுகுறித்து நெற்குப்பை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மருது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

மேலும் செய்திகள்