பள்ளிகொண்டா அருகே கார் கவிழ்ந்து 3 பேர் படுகாயம்

பள்ளிகொண்டா அருகே கார் கவிழ்ந்து 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2022-04-07 17:27 GMT
அணைக்கட்டு

சென்னையைச் சேர்ந்தவர் ரஞ்சன் (வயது 66). இவர், ஒரு காரில் தனது குடும்பத்தினருடன் பெங்களூருவில் உள்ள உறவினர் வீட்டில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்ேகற்று விட்டு  அங்கிருந்து சென்னைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். 

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே மேல்வெட்டுவாணம் தேசிய நெடுஞ்சாலையில் கார் வந்து கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து ஓடிய கார் அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. காரில் பயணம் செய்த 4 பெண்களில் 2 பெண்களும், ரஞ்சனும் படுகாயமடைந்தனர்.

 படுகாயமடைந்தவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

விபத்து பற்றி தகவல் அறிந்ததும் பள்ளிகொண்டா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காரில் பயணம் செய்தவர்களின் உடமைகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ரஞ்சன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர்களின் முழு விவரம் தெரியவில்லை, என பள்ளிகொண்டா போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்