ஸ்ரீவைகுண்டம் அருகே நெல் கொள்முதல் நிலையம் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
ஸ்ரீவைகுண்டம் அருகே நெல் கொள்முதல் நிலையம் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
ஸ்ரீவைகுண்டம்:
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள திருப்புளியங்குடி பெருமாள் கோவில் வளாகத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் தலைமை தாங்கி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார். இதனையடுத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். திறப்பு விழாவில் கலந்து கொண்ட பொதுமக்களிடம் குறைகளை கேட்டார். அவற்றை உடனடியாக செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
இந்நிகழ்ச்சிக்கு ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் மாவட்ட பொதுச்செயலாளர் சங்கர், மாவட்ட பொருளாளர் எடிசன், மாவட்ட துணை தலைவர் சிவசுப்பு, காங்கிரஸ் வட்டாரத்தலைவர் நல்லக்கண்ணு, மாவட்ட பொதுச்செயலாளர்கள் வெள்ளுர் அலங்கார பாண்டியன், பிச்சையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.