சாராயம் விற்றவர் கைது
மூங்கில்துறைப்பட்டு அருகே சாராயம் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
மூங்கில்துறைப்பட்டு,
மூங்கில்துறைப்பட்டு அடுத்த வடபொன்பரப்பி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சவுகத் அலி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பிரம்மகுண்டம் பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்தவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த துரைசாமி (வயது 67) என்பதும், சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து துரைசாமியை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 60 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.