கள்ளக்குறிச்சியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

கள்ளக்குறிச்சியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார்.

Update: 2022-04-07 16:47 GMT
கள்ளக்குறிச்சி, 

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை சார்பில் கள்ளச்சாராயம் காய்ச்சுதல், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல், போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் தீயசெயலுக்கு எதிராக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில் டாக்டர் ஆர்.கே.எஸ்.கல்லூரியை சேர்ந்த மாணவ, மாணவிகள், நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் மற்றும் தேசிய மாணவர்கள் கலந்து கொண்டு போதைப்பொருட்களினால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியும், துண்டு பிரசுரங்கள் வழங்கியும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

பேரணியானது மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து தொடங்கி கச்சிராயப்பாளையம் சாலை, காந்திரோடு, கச்சேரி சாலை, கடைவீதி வழியாக மந்தைவெளியில் முடிவடைந்தது. நிகழ்ச்சியில் உதவி ஆணையர் கலால்(பொறுப்பு) சுரேஷ், கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் சரவணன், துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜலட்சுமி, மதுவிலக்கு துணை சூப்பிரண்டு ரவிச்சந்திரன், கோட்ட கலால் அலுவலர் வாசுதேவன், தாசில்தார் விஜயபிரபாகரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்