ஸ்ரீவைகுண்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேர் ஆயுதப்படைக்கு மாற்றம்

சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டு உள்ளார்

Update: 2022-04-07 16:22 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த பிரபல ரவுடி ஒருவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளார். இவருடன் ஸ்ரீவைகுண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வசந்தகுமார், ஏட்டு சுப்பிரமணியன் ஆகியோர் நெருங்கிய நண்பர்களாக இருந்ததாக  கூறப்படுகிறது. அந்த ரவுடியின் பிறந்தநாளில் பங்கேற்ற போலீசார் கேக் கொடுப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவியது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வசந்தகுமார், ஏட்டு சுப்பிரமணியன் ஆகிய 2 பேரையும் தூத்துக்குடி ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து, போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவிட்டு உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
---------

மேலும் செய்திகள்