பதநீர் இறக்க அனுமதிக்க வேண்டும்

நாகையில் பதநீர் இறக்க அனுமதிக்க வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டிடம், நாம் தமிழர் கட்சியினர் மனு கொடுத்தனர்.

Update: 2022-04-07 15:29 GMT
வெளிப்பாளையம்:
நாம் தமிழர் கட்சி தொகுதி செயலாளர் அகஸ்டின் அற்புதராஜ், மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் நாம் தமிழர் கட்சியினர் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹரிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நாகை மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பனையேறும் விவசாயிகள் பனைமரத்தில் ஏறி பதநீர் இறக்க போலீசார் அனுமதி வழங்க மறுக்கின்றனர். மேலும் பனை மரம் ஏறினால் சாராய வழக்கு போடப்படும் என தெரிவிக்கின்றனர். இதனால் பனையேறும் விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பனைமரத்தில் ஏறி பதநீர் இறக்க அனுமதி அளிக்க வேண்டும். தமிழக அரசு பனை மரம் ஏறி பதநீர் இறக்க அனுமதி அளித்துள்ளது. ஆனால் போலீசார் பனைமரத்தில்  ஏறி பதநீர் இறக்க அனுமதி மறுக்கின்றனர். எனவே  பனை மரத்தில் ஏறி பதநீர் இறக்க அனுமதி அளிக்க வேண்டும்,இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்