பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Update: 2022-04-07 15:19 GMT
திண்டுக்கல்:
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜாமணி தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் ராஜாங்கம் உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.
செயலாளர் மணிகண்டன் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் இந்திய கம்யுனிஸ்டு மாநிலக்குழு உறுப்பினர் மணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்