பள்ளிபாளையம் வருவாய் துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாய சங்கத்தினர் 16 பேர் கைது

பள்ளிபாளையம் வருவாய் துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாய சங்கத்தினர் 16 பேர் கைது

Update: 2022-04-07 14:13 GMT
பள்ளிபாளையம்:
பள்ளிபாளையம் ஒன்றியம் எலந்தகுட்டை ஊராட்சி சின்னார்பாளையத்தில் பல ஆண்டுகளாக விவசாயிகள் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். இந்த நிலையில் அவர்களை அனுபவ நிலத்தில் இருந்து வெளியேற்றம் செய்ததை கண்டித்தும், மீண்டும் அனுபவ நிலங்களை சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு ஒப்படைக்க கோரியும், அனுபவ நிலங்களுக்கு பட்டா வழங்க கோரியும் அனைத்து விவசாய சங்க கூட்டமைப்பு சார்பில் பள்ளிபாளையம் வருவாய் துறை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர். இதற்கு மாவட்ட செயலாளர் பெருமாள் தலைமை தாங்கினார். தகவல் அறிந்து அங்கு சென்ற பள்ளிபாளையம் போலீசார் முற்றுகையில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் சமாதானம் அடையாத அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 4 பெண்கள் உள்பட 16 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்டவர்கள் பள்ளிபாளையம் நகராட்சி திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். 

மேலும் செய்திகள்