கூடலூர்
கூடலூர் அருகே நாடுகாணி தாவரவியல் பூங்கா உள்ளது. இங்கு கூடலூர் அரசு கலை கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் 50 பேர் வந்தனர். அவர்களை வனச்சரகர் பிரசாத் வரவேற்றார். பின்னர் அவர்கள் தாவரவியல் பூங்கா தூதுவர்களாக நியமிக்கப்பட்டனர். தொடர்ந்து வனங்களோடு ஒன்றி வாழுதல் பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. மேலும் ‘வைல்டு கர்நாடகா’ படம் திரையிடப்பட்டது. தொடர்ந்து நாட்டு நலப்பணி திட்ட நிறைவு நிகழ்ச்சி நடைபெற்றது. முகாமில் சிறப்பாக பங்கேற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், பல்லுயிர் பெருக்கத்தின் முக்கியத்துவம் குறித்தும், காடுகளில் தீ வைப்பதால் பல்லுயிர் அழிவது குறித்தும், யானைகளின் வலசை மற்றும் வழித்தடங்கள் பாதுகாக்கப்படுவதால் ஏற்படும் பயன்கள் குறித்தும், வனவிலங்குகளுக்கு உணவு பொருட்களை வழங்குவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விளக்கி கூறப்பட்டது.