செல்பியால் விபரீதம்- 500 அடி பள்ளத்தில் விழுந்து சிறுமி பலி

செல்பி எடுத்தபோது 500 அடி பள்ளத்தில் விழுந்து சிறுமி பலியானாள்.

Update: 2022-04-07 12:18 GMT
கோப்பு படம்
தானே, 
 தானே மாவட்டம் சகாப்பூர் தாலுகா உம்ராய் கிராமத்தை சேர்ந்தவர் தாமினி (வயது16). இவர் சம்பவத்தன்று மதியம் முர்பாடு தாலுகாவில் உள்ள கோரக்காட் கோட்டைக்கு நண்பர்களுடன் சென்றார். மாலை 4 மணியளவில் சிறுமி அங்குள்ள மலை உச்சியில் நின்று செல்பி எடுத்து கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் தடுமாறி 500 அடி ஆழ பள்ளத்தாக்கில் விழுந்தார். இதுகுறித்து சிறுமியின் நண்பர்கள் முர்பாடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். 
 போலீசார் உள்ளூர் மலையேற்ற வீரர்கள், பொது மக்கள் உதவியுடன் சிறுமியை தேடினர். இதில் சுமார் 6 மணி நேரத்திற்கு பிறகு சிறுமி பிணமாக மீட்கப்பட்டார். போலீசார் பிணத்தை  மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்