கிணற்றில் விழுந்த மலைப்பாம்பு மீட்பு

கடையநல்லூர் அருகே கிணற்றில் விழுந்த மலைப்பாம்பு மீட்கப்பட்டது.

Update: 2022-04-06 22:33 GMT
அச்சன்புதூர்:
கடையநல்லூர் அருகே அச்சன்புதூரில் ராமர் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. அங்குள்ள கிணற்றில் மலைப்பாம்பு விழுந்து கிடப்பதாக அவர், கடையநல்லூர் வனத்துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தார். உடனே வனத்துறையினர் கடையநல்லூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர் சீனிவாசன் தலைமையில் வீரர்கள் விரைந்து சென்றனர். கிணற்றுக்குள் கூடையை கட்டி இறக்கி மலைப்பாம்பை உயிருடன் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அதன்பின்னர் மலைப்பாம்பு காட்டுக்குள் விடப்பட்டது.

மேலும் செய்திகள்