மது விற்ற வாலிபர் கைது

சிவகிரியில் மது விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-04-06 22:19 GMT
சிவகிரி:
சிவகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமிர்தராஜ் தலைமையில் போலீசாா் வடுகபட்டி, தென்மலை மற்றும் காலனி பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தென்மலையில் இருந்து கரிவலம்வந்தநல்லூர் செல்லும் ரோட்டில் மதுபாட்டில்களை விற்பனை செய்ததாக, தென்மலை வடகாசியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த செல்லையா மகன் முருகன் (வயது 33) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 30 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்