பணம் பறிக்க முயன்றவர் கைது
சிவகாசி அருகே பணம் பறிக்க முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.
சிவகாசி,
சிவகாசி அருகே உள்ள கொங்கலாபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயராம் மகன் கலையரசன் (வயது22). இவர் சம்பவத்தன்று அதே பகுதியில் உள்ள மாடசாமி கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த முத்துராமலிங்கபுரம் காலனியை சேர்ந்த கார்த்திக் என்கிற குட்டகார்த்தி (21) என்பவர் கலையரசன் கழுத்தில் கத்தியை வைத்து பணம் கேட்டு மிரட்டி உள்ளார். அப்போது அந்த வழியாக வந்த சிலர் சத்தம் போட்டதை தொடர்ந்து குட்ட கார்த்தி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து கலையரசன் சிவகாசி கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து குட்ட கார்த்தியை கைது செய்தனர்.