2 வீடுகளில் பூட்டை உடைத்து நகை திருட்டு

ராதாபுரம் அருகே 2 வீடுகளில் பூட்டை உடைத்து நகைகளை மர்மநபர்கள் திருடி சென்று விட்டனர்.

Update: 2022-04-06 22:07 GMT
ராதாபுரம்:
ராதாபுரம் அருகே உள்ள கும்பிகுளத்தை சேர்ந்தவர் மூக்காண்டி (வயது 45), கூலி தொழிலாளி. அவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் பெருமாள் மனைவி சரஸ்வதி (65). இவர் தனியார் கல்லூரியில் சமையல் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று மூக்காண்டி, அவருடைய மனைவி மற்றும் சரஸ்வதி ஆகியோர் வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பினர். அப்போது 2 வீடுகளிலும் கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இருவரது வீடுகளிலும் தலா 4 பவுன் தங்க சங்கிலிகளை மர்மநபர்கள் திருடிச் சென்றுவிட்டது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் ராதாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்