விஷ வண்டுகள் அழிப்பு
சிவகாசி அருகே விஷ வண்டுகள் தீ வைத்து அழிக்கப்பட்டது.
சிவகாசி,
சிவகாசி அருகே உள்ள கிருஷ்ணபேரி கிராமத்தில் மரம் மற்றும் வைக்கோல் படப்பு ஆகியவற்றில் இருந்த விஷ வண்டுகள் கடித்து 3 பேர் காயம் அடைந்தனர். இது குறித்து சிவகாசி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீ வைத்து விஷ வண்டுகளை அழித்தனர்.