திற்பரப்பு அருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு
கோடை மழையால் திற்பரப்பு அருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது.
திருவட்டார்:
கடந்த ஒன்றரை மாத காலமாக கோடை வெயில் வாட்டி வதைத்தது. இதன்காரணமாக கோதையாற்றில் தண்ணீர் வரத்து குறையத் தொடங்கியதால் திற்பரப்பு அருவியில் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் தண்ணீர் கொட்டியது. இதனால் அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் முண்டியடித்தபடி குளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்தநிலையில் கடந்த 4 நாட்களாக மலையோர பகுதிகள் மற்றும் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இதன்காரணமாக கோதையாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால், தற்போது திற்பரப்பு அருவியின் அனைத்து பகுதியிலும் தண்ணீர் பரந்து விரிந்து பாய்வதால் சுற்றுலா பயணிகள் உற்சாகமாய் குளித்து மகிழ்ந்தனர்.