தேக்கு மரத்தை வெட்டியவருக்கு ரூ.2 லட்சம் அபராதம்
கடையம் அருகே தேக்கு மரத்தை வெட்டியவருக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
கடையம்:
கடையம் அருகே ஆம்பூரை அடுத்த தாட்டான்பட்டியில் உள்ள செங்கல்சூளையில் தேக்கு மரம் வெட்டப்பட்டதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. உடனே கடையம் வனச்சரக உதவி வனப்பாதுகாவலர் (பயிற்சி) ராதை தலைமையில், வனவர் முருகசாமி, வனகாப்பாளர் மணி உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதில் தேக்கு மரத்தை வெட்டியது தெரியவந்தது. இதையடுத்து செங்கல் சூளை உரிமையாளரான பரமசிவம் மீது வழக்குப்பதிவு செய்து, அவருக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது.