புகார் பெட்டி
புகார் பெட்டியில் தஞ்சை மக்கள் அளித்த கோரிக்கை விவரம் வருமாறு
குடிநீர் வசதி வேண்டும்
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுக்கா வடசேரி கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு வடசேரி, கெடியாலம், பவாத்தூர், நெம்மேலி, திருமங்கலகோட்டை, மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமாமன பொதுமக்கள் சிகிச்சைக்காக வருகின்றனர்.அதுமட்டும் அல்லாமல் கர்ப்பிணி பெண்கள் இங்கு அதிக அளவில் சிகிச்சைக்காக வருகின்றனர். இந்த நிலையில் இங்கு குடிநீர் வசதி இ ல்லை. தற்போது கோடை காலம் என்பதால் குடிநீர் தேவை என்பது பொதுமக்களுக்கு இன்றியமையாத ஒன்றாகி விட்டது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பார்களா?
-பொதுமக்கள், வடசேரி.