இலவச மருத்துவ பரிசோதனை முகாம்; இன்று நடக்கிறது

அரியலூரில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் இன்று நடக்கிறது.

Update: 2022-04-06 20:32 GMT
அரியலூர்:
உலக சுகாதார தினத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணியளவில் அரியலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற உள்ளது. முகாமில் வழக்காடிகள், வக்கீல்கள், நீதிபதிகள், நீதிமன்ற பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இலவசமாக மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. 
இந்த தகவல் அரியலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்