முத்துமாரியம்மன் கோவில் திருவிழா
தாரமங்கலத்தில் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவில் விமான அலகில் பக்தர்கள் ஊர்வலம் நடந்தது.
தாரமங்கலம்:-
தாரமங்கலம் 9-வது வார்டு அருணாசலம் புதூரில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று முன்தினம் இரவு சத்தாபரணம் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று அதிகாலை 6 மணியளவில் தாரமங்கலம் பஸ் நிலையம் அருகே உள்ள தெப்பக்குளம் அருகில் இருந்து அக்னி கரகம், பூங்கரகம், வாகன அலகு, விமான அலகு என்று 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் அலகு குத்திக்கொண்டும், கரகம் எடுத்தும் ஊர்வலமாக புறப்பட்டனர். நகரின் முக்கிய வீதிகள் வழியாக அருணாசலம் புதூரில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலுக்கு ஊர்வலம் வந்து சேர்ந்தது. அதன்பிறகு மதியம் சிறப்பு பூஜைகள் செய்து ஆடு, கோழி பலியிட்டு வழிபாடு நடத்தினர்.