அரக்கோணத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 10-ந் தேதி நடக்கிறது
அரக்கோணத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 10-ந் தேதி நடக்கிறது.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மகளிர் திட்டம் சார்பில் 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்த கிராமப்புறத்தைச் சார்ந்த இளைஞர்களுக்கு தனியார் துறை மூலம் வேலைவாய்ப்பு அளித்திட வருகிற 10-ந் தேதி அரக்கோணத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
இதில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ள இருப்பதால் வேலை நாடுபவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.