பால் வியாபாரிக்கு கத்திக்குத்து
குளித்தலை அருகே பால் வியாபாரிக்கு கத்திக்குத்து விழுந்தது.
குளித்தலை,
குளித்தலை அருகே உள்ள கருங்கலாப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் மணிவேல் என்கிற பொன்னுசாமி (வயது 34), பால் வியாபாரி. அதே பகுதியை சேர்ந்தவர் லோகநாதன். இவரது மனைவி ராஜசுதா. இந்தநிலையில், பொன்னுசாமிக்கும், ராஜசுதாவிற்கும் இடையே தொடர்பு இருப்பதாக தவறாக நினைத்துக்கொண்ட லோகநாதன், குளித்தலை அருகே உள்ள பரளி 4 ரோடு பகுதியில் இருந்த பொன்னுசாமியை தகாத வார்த்தைகளால் திட்டி தான் வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து பொன்னுசாமி அளித்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள லோகநாதனை வலைவீசி தேடி வருகின்றனர்.