தேங்காய் வியாபாரி மர்மச்சாவு

தேங்காய் வியாபாரி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

Update: 2022-04-06 18:35 GMT
நொய்யல், 
நொய்யல் அருகே குளத்துப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தங்கராசு (வயது 51), தேங்காய் வியாபாரி. இவரது மனைவி மல்லிகா (37). இவரது மகள் ஜீவிகா. இந்தநிலையில், குடும்ப பிரச்சினை காரணமாக மல்லிகாவும், அவரது மகளும் வெளியூரில் வசித்து வருகின்றனர். நேற்று காலை 6 மணியளவில் குளத்துப்பாளையத்திலிருந்து ஒரம்புபாளையம் செல்லும் சாலையோரத்தில் தங்கராசு மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கராசுவை யாரேனும் அடித்து கொலை செய்தனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்