எருமப்பட்டி அருகே பெண்ணை தாக்கிய 2 பேர் கைது

எருமப்பட்டி அருகே பெண்ணை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-04-06 18:32 GMT
எருமப்பட்டி:
எருமப்பட்டி அருகே உள்ள வடவத்தூரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மனைவி சித்ரா (வயது 42). இவர் வடுகப்பட்டியில் ஏரிக்கரை அருகே உள்ள நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். இந்தநிலையில் சம்பவத்தன்று ஈச்சவாரியை சேர்ந்த அன்பரசு (22), ஜீவா (27) ஆகியோர் மது அருந்தி விட்டு சித்ரா விவசாய நிலத்தில் பாட்டில்களை வீசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சித்ரா கேட்டபோது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அன்பரசு, ஜீவா ஆகியோர் சித்ராவை தாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்து சித்ரா எருமப்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்பரசு, ஜீவாவை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்