பரமத்திவேலூர் அருகே மாரியம்மன் கோவில் தீ மிதி விழா
பரமத்திவேலூர் அருகே மாரியம்மன் கோவில் தீ மிதி விழா நடந்தது.
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் அருகே வீராணம்பாளையத்தில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த மாதம் 20-ந் தேதி கம்பம் நடுதலுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து 27-ந் தேதி மறுகாப்பு கட்டுதல் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு தினமும் பல்வேறு அபிஷேகங்களும், பூஜைகளும் நடந்தன. இந்தநிலையில் 4-ந் தேதி தீ மிதி விழா நடந்தது. முன்னதாக பக்தர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பின்னர் அவர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் வீரணம்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். நேற்று முன்தினம் மாலை மாவிளக்கு பூஜையும், நேற்று மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடந்தது.