மாவட்ட அளவிலான போட்டிக்கு அரசு பள்ளி மாணவி தேர்வு

மாவட்ட அளவிலான போட்டிக்கு அரசு பள்ளி மாணவி தேர்வு செய்யப்பட்டார்.

Update: 2022-04-06 18:20 GMT
தேவகோட்டை, 
தேவகோட்டை வட்டார அளவிலான போதை ஒழிப்பு விழிப்புணர்வு வாசகம் எழுதுதல் போட்டி வட்டார வள மையத்தால் நடத்தப்பட்டது. இதில் தேவகோட்டை அருகே உள்ள புளியால் ‌அரசு‌ உயர்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு மாணவி 3-ம் இடம் பிடித்து சிவகங்கை வருவாய் மாவட்ட அளவிலான போட்டிக்கு தேர்வாகி உள்ளார். வெற்றி பெற்ற மாணவியையும், பயிற்சி அளித்த ஆசிரியர் ஜோசப் இருதயராஜையும் பள்ளி தலைமை ஆசிரியர் நாகேந்திரன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஜோசப், ஊராட்சி மன்ற தலைவர் மிக்கேல்ராஜ் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், அலுவலர்கள் பாராட்டினர்.

மேலும் செய்திகள்