சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம்
சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சிவகங்கை மாவட்ட முன்னாள் படைவீரர்கள் படைப்பணியாற்றுவோர் மற்றும் அவரை சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் சிவகங்கை கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்றக்கூடத்தில் வருகிற 20-ந் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது. எனவே சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் படைப்பணியாற்றுவோர் மற்றும் அவரை சார்ந்தோர்கள் இந்த சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வருகை புரிந்து, தங்களது குறைகளை இரட்டைப்பிரதிகளில் மனுவாக நேரடியாக வழங்கி தீர்வு காணலாம். இவ்வாறு அதி்ல் கூறப்பட்டுள்ளது.