வருகிற நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும்
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என துரை வைகோ கூறினார்.
காரைக்குடி,
காரைக்குடியில் ம.தி.மு.க. தலைமை கழக செயலாளர் துரை வைகோ நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, சொந்த காரணங்களால் கட்சிக்கு எதிராக செயல்படும் 4 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சொத்துவரி உயர்த்தப்பட்டதை மறுபரிசிலனை செய்ய வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வினால், அனைத்துப்பொருட்களும் விலையேற்றத்தை சந்தித்துள்ளன. மத்திய அரசின் விலையேற்ற நடவடிக்கை மக்கள் நலனிலும், நாட்டின் வளர்ச்சியிலும் அவர்களுக்கு அக்கறை இல்லை என்பதையே காட்டுகிறது.அ.தி.மு.க. பொட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்தோ, சுங்க கட்டணம் உயர்வு குறித்தோ போராட்டம் நடத்தவில்லை. வருகிற நாடாளுமன்ற தேர்தலின் போது மத்தியில் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும்.கடும் பொருளாதார நெருக்கடியில் உள்ள இலங்கை அரசுக்கு மத்திய அரசு நிதி உதவி செய்வது தவறல்ல. இதனை பயன்படுத்தி தமிழக மீனவர்கள் மற்றும் இலங்கையில் உள்ள வட கிழக்கு தமிழர்களின் பாதுகாப்பினையும் உறுதி செய்ய நிர்பந்திக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.