பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2022-04-06 17:14 GMT
ஆலங்குடி:
மத்திய அரசின் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஆலங்குடி வட்டங்கச்சேரி திடலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு திருமயம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும்,  மாவட்ட தலைவருமான சுப்புராமன் தலைமை தாங்கினார். காங்கிரஸ் கட்சியின் மாவட்ட துணை தலைவர் ஆசிரியர் தமிழ்ச்செல்வன், தெற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சரண் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து கோஷம் எழுப்பினர். இதில் காங்கிரஸ் கட்சியினர் திரளானோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்