ஓசூர் அருகே ஸ்கூட்டரில் புகையிலை பொருட்கள் கடத்தியவர் கைது
ஓசூர் அருகே ஸ்கூட்டரில் புகையிலை பொருட்கள் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
ஓசூர்:
ஓசூர் சிப்காட் போலீசார், கோவிந்த அக்ரஹாரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக ஸ்கூட்டரில் வந்த நபரை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் ஹான்ஸ், பான் மசாலா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி வந்தது தெரிந்தது. தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த நபர், கர்நாடக மாநிலம் ஒசகோட்டா அருகே நந்தகுடியை சேர்ந்த ராஜேஷ் (வயது32) என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் புகையிலை பொருட்கள், ஸ்கூட்டரை பறிமுதல் செய்தனர்.