கோடை காலம் தொடங்கியதால் வன விலங்குகளுக்கு தொட்டியில் தண்ணீர் நிரப்பும் வனத்துறையினர்

கோடை காலம் தொடங்கியதால் வன விலங்குகளுக்கு தொட்டியில் வனத்துறையினர் தண்ணீர் நிரப்பும் பணியில் ஈடுபட்டனர்.

Update: 2022-04-06 17:12 GMT
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனக்கோட்டம் ஜவளகிரி வனச்சரகத்தில் 40-க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன. தற்போது கோடைகாலம் தொடங்கியதால் குட்டைகள், நீர்நிலைகளில் தண்ணீர் குறைந்துவிட்டது. இதனால் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களை நோக்கி யானைகள், மான் உள்ளிட்ட வனவிலங்குகள் தண்ணீர், உணவு தேடி வெளியேறி வருகின்றன. இதனால் யானைகள் தாக்கி பொதுமக்கள் உயிர் இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வன விலங்குகள் கிராமத்திற்குள் புகுவதை தடுக்கும் வகையில் ஜவளகிரி வனச்சரகர் சுகுமார் மற்றும் வனத்துறையினர் ஜவளகிரி வனச்சரகத்தில் உள்ள தொட்டிகளில் வன விலங்குகளுக்கு தண்ணீர் நிரப்பும் பணியில் ஈடுபட்டனர். இந்த பணியை  மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயனி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் யானை, காட்டெருமை, மான் உள்ளிட்ட வன விலங்குகள் வந்து தண்ணீர் குடித்து தாகத்தை தீர்த்து வருகின்றன.

மேலும் செய்திகள்