நல்லநாயகி அம்மன் கோவில் பங்குனி தேர் திருவிழா
நல்லநாயகி அம்மன் கோவில் பங்குனி தேர் திருவிழா நடைபெற்றது
மயிலாடுதுறை
மயிலாடுதுறை அருகே மணக்குடியில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான நல்லநாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி திருவிழா கடந்த 29-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழாவையொட்டி 3-ந்தேதி நல்லநாயகி அம்மன் நாக பல்லக்கில் வீதி உலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேர் திருவிழா நேற்று நடந்தது. அப்போது சிறப்பு அலங்காரத்தி்ல் நல்லநாயகி அம்மன் மற்றும் பொறையான் ஆகியோர் தேர்களில் எழுந்தருளினர். தொடர்ந்து கிராமமக்கள் தேர்களை தங்களது தோள்களில் சுமந்து வந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.