நடிகை சஞ்சனா கல்ராணி மொட்டை அடித்து கொண்டாரா? சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் வைரல்

நடிகை சஞ்சனா கல்ராணி மொட்டை அடித்து கொண்டாரா? சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது

Update: 2022-04-06 16:18 GMT
பெங்களூரு: கன்னட திரைஉலகில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் சஞ்சனா கல்ராணி. இவருக்கு சமீபத்தில் ரகசிய திருமணமும் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது. தற்போது நிறைமாத கர்ப்பிணியாகி உள்ள சஞ்சனா கல்ராணி மொட்டை அடித்துக் கொண்டார் என்று சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவின. மேலும் அவர் மொட்டை தலையுடன் இருப்பது போன்ற புகைப்படங்களும் வைரலாகின. சிலர் புற்றுநோயாளிகளுக்காக சஞ்சனா கல்ராணி தனது முடியை தானம் செய்துவிட்டதாகவும் கூறினர். 
இந்த நிலையில் சஞ்னா கல்ராணி சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 
அதில் அவர் தனது அழகிய சிகை அலங்காரத்துடன் காட்சி அளித்தார். தான் மொட்டை அடிக்கவில்லை என்றும், முட்டாள்கள் தினத்தை கொண்டாடும் வகையில் தனது குடும்பத்தினர், ரசிகர்கள் மற்றும் தனக்கு நன்கு அறிமுகமானவர்களை ஏமாற்ற வேண்டி அவ்வாறு செய்திகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதாகவும் வீடியோவில் அவர் கூறி உள்ளார். சஞ்சனா கல்ராணியின் இந்த செயலுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். நடிகை சஞ்சனா கல்ராணி போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்