கன்னட செம்மொழி ஆராய்ச்சி மையத்திற்கு தன்னாட்சி அதிகாரம்; மந்திரி சுனில்குமார் கோரிக்கை

கன்னட செம்மொழி ஆராய்ச்சி மையத்திற்கு தன்னாட்சி அதிகாரம் வழங்குமாறு மத்திய மந்திரி தர்மேந்திர பிரதானிடம், சுனில்குமார் கோரிக்கை விடுத்தார்.

Update: 2022-04-06 15:13 GMT
பெங்களூரு:

மத்திய கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதானை டெல்லியில் நேற்று கர்நாடக மின்சாரம் மற்றும் கன்னட வளர்ச்சித்துறை மந்திரி சுனில்குமார் நேரில் சந்தித்து பேசினார். அப்போது சுனில்குமார், மைசூருவில் உள்ள தேசிய மொழிகள் நிறுவன மையத்தில் அமைந்திருக்கும் கன்னட செம்மொழி உயர் ஆராய்ச்சி மையத்திற்கு தன்னாட்சி அதிகாரம் வழங்குமாறு கோரிக்கை விடுத்தார். அதற்கு தர்மேந்திர பிரதான், இதுகுறித்து பரிசீலிப்பதாக உறுதியளித்தார். மேலும் அந்த செம்மொழி மையத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்வதாகவும் கூறியுள்ளார். மேலும் தான் நேரில் அங்கு வந்து ஆய்வு செய்வதாகவும் உறுதியளித்தார்.

மேலும் செய்திகள்