பாலியல் வழக்கில் பேத்திக்கு நீதி கிடைக்க போராடிய பாட்டி- சிறப்பு கோர்ட்டு பாராட்டு

பாலியல் வழக்கில் பேத்திக்கு நீதி கிடைக்க போராடிய பாட்டியை சிறப்பு கோர்ட்டு பாராட்டியது.

Update: 2022-04-06 15:06 GMT
கோப்பு படம்
மும்பை, 
மும்பையை சேர்ந்த சிறுமி தந்தை, பாட்டி மற்றும் சகோதரர்களுடன் குடிசைப்பகுதியில் வசித்து வந்தார். இதில் சிறுமியின் தந்தை அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இது குறித்து சிறுமி பாட்டியிடம் கூறினாள். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பாட்டி போலீசில் புகார் கொடுத்தார். இந்த வழக்கு மீதான விசாரணை மும்பை சிறப்பு கோர்ட்டில் நடந்தது. அப்போது நீதிபதி பாரதி காலே, "மகன் சிறைக்கு சென்றால் அவர் தான் குழந்தைகளை பார்க்க வேண்டும் என்பது தெரிந்தும், முதுமையை பொருட்படுத்தாமல் பேத்திக்காக நீதி கேட்டு வந்து உள்ள பாட்டி பாராட்டுக்குரியவர்" என கூறினார். 
மேலும் தந்தை என்பவர் மகளை பாதுகாத்து, காயங்கள் ஏற்படாமல் அவளை பாதுகாக்க வேண்டியவர், ஆனால் இங்கு ஒரு தந்தையே மகளுக்கு தாங்க முடியாத வலியை கொடுத்து உள்ளார் என கூறி பெற்ற மகளையே சீரழித்த தந்தைக்கு 25 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கி தீர்ப்பு கூறினார்.

மேலும் செய்திகள்