சாராயம் விற்ற 10 பேர் கைது
சாராயம் விற்ற 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை தாலுகா போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமாமாலினி தலைமையிலான போலீசார் சாராய ஒழிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சாராய வியாபாரத்தில் ஈடுபட்ட செங்கம் தாலுகா வாசுதேவம்பட்டு பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (வயது 40), முனியன் (35), ராஜீவ்காந்தி (36), மூர்த்தி (35), ஓரந்தவாடியை சேர்ந்த ஏழுமலை (51), சேகர் (56), கோவிந்தன் (65), சிவக்குமார் (34), வேடியப்பன் (45), அனந்தல் கிராமத்தை சேர்ந்த குமரேசன் (55) ஆகிய 10 பேரை போலீசார் கைது செய்தனர்.