கீழ்வேளூர் அட்சயலிங்கசாமி கோவிலில் பங்குனி தேரோட்டம்
கீழ்வேளூர் அட்சயலிங்கசாமி கோவிலில் பங்குனி தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
சிக்கல்:
கீழ்வேளூர் அட்சயலிங்கசாமி கோவிலில் பங்குனி தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
அட்சயலிங்கசாமி கோவில்
நாகை மாவட்டம் கீழ்வேளூரில் பிரசித்திபெற்ற அட்சயலிங்கசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு பங்குனி திருவிழா கடந்த மார்ச் 27-ந்தேதி தொடங்கியது. விழாவில் தினமும் அஞ்சுவட்டத்தம்மன் சிம்ம வாகனம், அன்னபட்சி, யானை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடந்தது.
பங்குனி தேரோட்டம்
விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை 7 மணிக்கு பங்குனி தேரோட்டம் நடைபெற்றது. அப்போது தேரில் அஞ்சுவட்டத்தம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் நான்கு வீதிகளில் சாமி வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். விழாவில் கோவில் செயல் அலுவலர் சீனிவாசன், தாசில்தார் அமுதா, கீழ்வேளூர் ஒன்றியக்குழு தலைவர் வாசுகிநாகராஜன் மற்றும் அறநிலையத்துறை அலுவலர்கள், கோவில் பணியாளர்கள், வர்த்தக சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
----