புகார் பெட்டி

புகார் பெட்டி

Update: 2022-04-05 22:20 GMT
சுகாதார நிலையம் சீரமைக்கப்படுமா?
 பத்மநாதபுரம் அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தின்  கட்டிடத்தின் சுவர் சில இடங்களில் பெயர்ந்து மேற்கூரை ஓடுகள் பல இடங்களில் உடைந்து மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. மழைக்காலங்களில் உடைந்து காணப்படும் மேற்கூரை வழியாக மழை நீர் உள்ளே வடிந்து நீர் தேங்கிய சூழலும் ஏற்பட்டுள்ளது. இதனால் இங்கு முதலுதவி சிகிச்சைக்காக வரும் பொதுமக்கள்  சில நேரங்களில் மிகவும் பாதிப்பு அடைகிறார்கள். மேலும் மேற்கூரை ஓடுகள் உடைந்து காணப்படுகிறது. எனவே பொதுமக்களின் நலன் கருதி  அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு புதிய கட்டிடம் கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                                                             -மேசியா, குமாரபுரம்.
சுகாதார சீர்கேடு
திக்கணங்கோடு கால்வாயில்  சிலா் வீடுகளில் உள்ள  குப்பைகளை   கொட்டுகின்றனர். இதனால் கால்வாயில் தண்ணீர் வேகமாக  செல்ல முடியாமல் குப்பைகள் குவிந்து கிடக்கிறது.  விவசாயத்திற்கும் பயன்படுத்த முடியாத நிலையும் உள்ளது .எனவே சம்பந்தப்பட்ட துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 - ஜான், திக்கணங்கோடு. 

சாலை சீரமைக்கப்படுமா ?
அம்மாண்டிவிளை சந்திப்பில் இருந்து முட்டம் செல்லக்கூடிய சாைல உடைந்து குண்டும் ,குழியுமாக காட்சியளிக்கிறது. இந்த சாைைலயில் ஏராளமான பஸ் மற்றும்  வாகனங்கள் வந்து செல்லும் முக்கிய சாலையாகும். இதனால் விபத்து ஏற்படும்  அபாயம் உள்ளது. அதுமட்டுமில்லாமல் அதன்  அருகில் குடிநீர் குழாய் உடைந்து  தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் தொற்று நோய் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள்உடனடியாக அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். 
                                                      -லிங்கத்துரை, அம்மாண்டிவிளை.
மின்விளக்கு  வசதி தேவை
ராஜாக்கமங்கலத்திலிருந்து அரசன்விளை செல்லும் சாலையில் மின்விளக்குகள்  எரியாமல் உள்ளது. இதனால் சாலையோரம் பொதுமக்கள் நடந்து செல்ல அச்சப்படுகின்றனர் .   இந்த சாலையில் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே  மின்விளக்கை பொருத்தி எரிய வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.     
                                                            - செ.ஜெயன் , ராஜாக்கமங்கலம்.
கழிவு நீர் ஓடை சரி செய்யப்படுமா?
நாகர்கோவில் மாநகராட்சி 44 -வது வாட்டுக்கு உட்பட்ட ஈத்தாமொழி ரோடு பட்டகசாலியன்விளை சந்திப்பிலிருந்து பீச் ரோடு மற்றும் பிள்ளையார் கோவில் கிழக்கு தெருவிலும்  உள்ள கழிவுநீர் ஓடையில் மண் நிரம்பி கழிவுநீர் செல்லாமல் தேங்கி நிற்கிறது .இதனால்தொற்றுநோய்  பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பத்மசெல்வராஜ், பட்டகசாலியன்விளை

மேலும் செய்திகள்