தினத்தந்தி புகாா்பெட்டி

பொதுமக்கள் குறைகளை தொிவிக்கும் பகுதி

Update: 2022-04-05 20:56 GMT
மின்கம்பம் மாற்றிஅமைக்கப்படுமா? 

பவானி வர்ணபுரம் 3-வது வீதியில் பவானி நகராட்சி நுழைவு வாயில் அருகே மின் கம்பம் உள்ளது. இந்த கம்பத்தின் அடிப்பகுதியில் சிமெண்டு காைர உடைந்து அதில் உள்ள இரும்பு கம்பி எலும்புக்கூடு போன்று தெரிகிறது. மின்வாரிய துறையினர் உடைந்த கம்பத்தின் அருகில் இன்னொரு மின்கம்பத்தை நட்டு மின் இணைப்பு கொடுத்து உள்ளனர். ஆனாலும் பழைய மின்கம்பம் உடையும் நிலையில் உள்ளது. எனவே ஏதேனும் ஆபத்து ஏற்படுவதற்கு முன் பழைய மின்கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும்.

பொதுமக்கள், பவானி.


பயணிகளுக்கு இடையூறு

  கோபி பஸ்நிலையத்தில் அந்தியூர் பஸ்கள் நிற்கும் பகுதியில் கடைகளுக்கு முன்பு உபயோகமில்லாத பழைய இரும்பு பொருட்கள் வைக்கப்பட்டு உள்ளது. இந்த பழைய பொருட்கள் கடந்த 1 மாதத்துக்கும் மேலாக அப்புறப்படுத்தாமல் உள்ளது. அதன் அருகில் குப்பைகளும் ெகாட்டப்பட்டு கிடக்கிறது. மேலும் கடையின் முன்புறம் நடைபாதையில் இரு சக்கர வாகனங்களும் நிறுத்தப்பட்டு உள்ளன. இதனால் நடைபாதையை பயன்படுத்த முடியாமல் பயணிகள் அவதிப்படுகின்றனர். இதனால் நடைபாதையை விட்டு விலகி பொதுமக்கள் வெயிலில் நிற்கிறார்கள். எனவே பயணிகளுக்கு இடையூறாக உள்ள பழைய இரும்பு பொருட்களை அப்புறப்படுத்தவும், இரு சக்கர வாகனங்களை நிறுத்தாமல் இருப்பதற்கும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  பொதுமக்கள், கோபி.
  
  
ஆபத்தான குழி

  ஈரோடு வீரப்பன்சத்திரம் சிவா வீதியில் ஆபத்தான குழி உள்ளது. இந்த குழியில் பலர் விழுந்து விடுகிறார்கள். நான்கு சக்கர வாகனங்கள் செல்லமுடியவில்லை. இந்த குழியில் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் உடைந்த செங்கல்லை போட்டு வைத்து உள்ளனர். எனவே ஆபத்தான இந்த குழியை மூட வேண்டும்.
  சத்யா, ஈரோடு.
  
  
  
மதுபாராக மாறிய ஆற்றங்கரை

  கோபி அருகே உள்ள நஞ்சை புளியம்பட்டியில் பவானி ஆறு செல்கிறது. இங்குள்ள பாலத்தின் கீழ் பகுதியில் ஆற்றில் குளிப்பதற்காக ஆண்கள், பெண்கள் என பலரும் குடும்பத்துடன் வருகின்றனர். பட்டப்பகலில் மதுப்பிரியர்கள் பல்வேறு வாகனங்களில் வந்து அங்குள்ள ஆற்றங்கரையில் உட்கார்ந்து மது குடிக்கின்றனர். இதனால் ஆற்றுக்கு பெண்கள் சென்று குளிக்க முடியாமல் அச்சப்பட வேண்டிய சூழ்நிலை உள்ளது. மேலும் மதுபிரியர்கள் குடித்துவிட்டு அந்த பகுதியில் கும்மாளமிடுகின்றனர். ஆற்றங்கரையை பாராக மாற்றும் மது பிரியர்கள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  பொதுமக்கள், நஞ்சைபுளியம்பட்டி.
  
தடுப்பு கம்பிகள் வேண்டும் 

  ஈரோடு பி.பி.அக்ரஹாரம் கட்டளை கதவணை செல்லும் வழியில் காலிங்கராயன் வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலை கடந்து செல்வதற்காக பாலம் ஒன்று உள்ளது. இந்த பாலத்தில் தடுப்பு கம்பிகள் உடைந்து காணப்படுகிறது. இதனால் இந்த பாலத்தில் செல்பவர்கள் வாய்க்காலுக்குள் விழுந்து விடுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. எனவே ஆபத்தான இந்த பாலத்திற்கு தடுப்பு கம்பிகள் அமைக்க வேண்டும்.
  முருகன், ஈரோடு.
  
  
ஆற்றுக்குடிநீர் வேண்டும்

  பவானியை அடுத்த தொட்டிபாளையம் ஊராட்சி புதுக்காடையம்பட்டி 11-வது வார்டுக்கு உள்பட்ட பகுதியில் உள்ளவர்களுக்கு தளவாய்ப்பேட்டை கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் ஆற்றுக்குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. எனினும் இந்த வார்டுக்கு உள்பட்ட ஒரு பகுதியில் உள்ள 20 குடும்பத்தினருக்கு ஆற்றுக்குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. ஆனால் 20 குடும்பத்தினருக்கும் ஆழ்துளை கிணற்றில் இருந்து எடுக்கப்படும் உப்புத்தன்மை மிகுந்த நீர்் வினியோகிக்கப்படுகிறது. எனவே 20 குடும்பத்தினருக்கும் ஆற்றுக்குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  பொதுமக்கள், புதுக்காடையாம்பட்டி.
  
சாலைப்பணி விரைந்து முடிக்கப்படுமா?

  ஈரோடு முதல் கோபி ஆசாரி மேடு வரை கடந்த 5 மாதங்களுக்கு முன்பு சாலை விரிவாக்கப் பணி தொடங்கப்பட்டது. இதற்காக சாலையின் இருபுறமும் ரோடு தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் அந்த ரோட்டில் வாகனங்கள் செல்லும்போது புழுதி பறக்கிறது. இதன்காரணமாக இருசக்கர வாகனங்களில் ெசல்பவர்களின் கண்களில் புழுதி விழுந்து விபத்து ஏற்படுகிறது. எனவே ரோடு விரிவாக்க பணியை விரைந்து முடிக்க வேண்டும்.
  பொதுமக்கள், கோபி.

மேலும் செய்திகள்