நிலத்தகராறில் தம்பியை தாக்கிய அண்ணன் கைது
நிலத்தகராறில் தம்பியை தாக்கிய அண்ணன் கைது செய்யப்பட்டார்.
தலைவாசல்
தலைவாசல் அருகே நாவக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் முத்துச்சாமி (வயது 65). இவருடைய தம்பி மணி (55). இவர்கள் இருவருக்கும் இடையே நிலத்தகராறு தொடர்பாக முன் விரோதம் இருந்தது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தம்பி மணியை முன்விரோதம் காரணமாக அவருடைய அண்ணன் முத்துசாமி, அண்ணி பொன்முடி உள்பட 3 பேர் சேர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து மணி கொடுத்த புகாரின் பேரில் தலைவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த வழக்கில் அண்ணன் முத்துசாமியை நேற்று போலீசார் கைது செய்தனர். அதேநேரத்தில் முத்துசாமி கொடுத்த புகாரின் பேரில் தம்பி மணி மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.