ஓய்வு பெற்ற தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ஓய்வு பெற்ற தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-04-05 20:49 GMT
சேலம்:-
ஓய்வு பெற்ற தபால் மற்றும் ஆர்.எம்.எஸ். ஊழியர்கள் சங்கத்தினர் நேற்று பழைய பஸ் நிலையம் அருகில் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட துணைத்தலைவர் பார்த்திபன் தலைமை தாங்கினார். மாநில துணை செயலாளர் நேதாஜி சுபாஷ், அமைப்பு செயலாளர் ராஜாராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வயதிற்கு தகுந்தாற் போல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட ஆஸ்பத்திரிகளில் ஓய்வூதியர்கள் சிகிச்சை பெற அனுமதி வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

மேலும் செய்திகள்