பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

Update: 2022-04-05 20:04 GMT
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பஸ் நிலையத்தில் பெண் குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின்பேரில் துணை சூப்பிரண்டு கலைகதிரவன் அறிவுறுத்தலின்படி நடந்த  இந்த நிகழ்ச்சிக்கு ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி தலைமை தாங்கினார். இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பற்றியும், பொது இடங்களில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாலியல் குற்றங்கள் சம்பந்தமாக ஏற்படும் தொல்லைகள், படிப்பை பாதியில் நிறுத்திய குழந்தைகளுக்கு படிப்பை மீண்டும் தொடர செய்வது, பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் இருவரும் வேலைக்கு சென்றுவிடும் நிலையில் குழந்தைகள் தனியாக இருப்பதை கண்காணித்து அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது, பெற்றோர்கள் இல்லாத குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளிப்பது உள்ளிட்டவை குறித்து ேபாலீசாரால் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் 181, 1098, 1930 உள்ளிட்ட எண்களை உதவிக்கு அழைக்குமாறு பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த பெண்கள், குழந்தைகள், மாணவிகள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் பாதுகாப்பு நலன் கருதி காவல்துறை மூலம் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், எனவே பெற்றோர்களும், பெண் குழந்தைகளின் பாதுகாப்பு நலன் கருதி விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும், மேலும் ஏதேனும் நிகழ்வுகள் நடந்தால் சம்பவம் பற்றி அறிந்தவர்கள் உடனடியாக மேற்கண்ட எண்ணுக்கு தொலைபேசி மூலம் அழைத்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கும் உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.

மேலும் செய்திகள்