அம்பை அகஸ்தீஸ்வரர் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம்
அம்பை அகஸ்தீஸ்வரர் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம் நடந்தது.
அம்பை:
அம்பை காசிநாதர் கோவிலில் நேற்று காலை பங்குனி திருவிழா கொடியேற்றம் நடந்தது. விழா தொடர்ந்து 10 நாட்கள் நடக்கிறது. விழா நாட்களில் தினமும் சுவாமி- அம்பாள் வீதி உலா நடக்கிறது. சிகர நிகழ்ச்சியாக 8-வது திருநாளில் சிவபெருமான் நடராஜர் கோலத்தில் அகத்தியருக்கு திருமண காட்சி கொடுக்கும் வைபவமும், தொடர்ந்து தேரோட்டம், தீர்த்தவாரியும் நடைபெறும். கொடியேற்ற நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி கிருஷ்ணவேணி, முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர்கள் வாசுதேவராஜா, பண்ணை கண்ணன், அரசு வக்கீல் காந்திமதிநாதன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அம்பை அகஸ்தீஸ்வரர் கோவிலில் நேற்று காலை பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஒவ்வொரு நாளும் சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடக்கிறது. 8-வது திருநாளில் விரதமிருந்த பக்தர்கள் அம்பை தாமிரபரணி ஆற்றில் இருந்து ஆண்கள் அங்கப்பிரதட்சணமும், பெண்கள் கும்பிடு நமஸ்காரம் நிகழ்ச்சியும் நடக்கிறது. மதியம் அன்னம் சொரிதல் நிகழ்ச்சி நடைபெறும். தொடர்ந்து இரவு அகத்தியருக்கு, சிவபெருமான் திருமணக் காட்சி கொடுக்கும் வைபவம், அம்பை பூக்கடை பஜாரில் நடைபெறும். கொடியேற்ற நிகழ்ச்சியில் கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் சங்கு சபாபதி, சங்கரலிங்க சுவாமி கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் முருக சாமிநாதன் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் கல்லிடைக்குறிச்சி அகஸ்தீஸ்வரர் கோவிலிலும் பங்குனி திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது.